கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பாலம் வழக்கு ஒத்திவைப்பு..!

தமிழக வழக்கறிஞரால் ஆஜராக முடியாததால் உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கின்றது.


கோவை: கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பாலம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணி கடந்த 2013ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பாலம் கட்டுவதற்கான நிலங்களைக் கையகப்படுத்தாமல் மாநில நெடுஞ்சாலைத்துறை இப்பணியினை தொடங்கியதால் நில உரிமையாளர்கள் உயர்மட்ட பாலம் அமைவதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் காரணமாக பாலம் கட்டும் வேலையானது பாதியில் நிறுத்தப்பட்டது. பாலம் அமைக்கும் பணியினை தற்போது திமுக விரைவு செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு இதனை கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்த அவர் தகுந்த இழப்பீடு வழங்கி பாலம் வேலையினை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.29 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரத்து 910 ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் நிலம் கையகப்படுத்த சதுரடிக்கு ரூ.2,600 இழப்பீடு 100 சதவீதம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

நிலம் கையகப்படுத்த சதுரடிக்கு ரூ.1,200, இழப்பீடாக சதுரடிக்கு 2,600 என ரூ.5,200 உடன் 12 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இழப்பீடு தொகைக்கும் 12 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையினரோ கையகப்படுத்தும் நிலத்திற்கான மதிப்புக்கு மட்டுமே வட்டி வழங்க முடியும் என்றும், இழப்பீடு தொகைக்கான வட்டியை வழங்கினால் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்கின்றனர். அதனால் நெடுஞ்சாலைத் துறையினரால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் தமிழக வழக்கறிஞரால் ஆஜராக முடியாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை 25ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கின்றது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...