கோவை மாநகராட்சி 37வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மேயர் திடீர் ஆய்வு..!

அப்பகுதிகளில் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், அங்கன்வாடி மையம்‌ புதுப்பிக்க, புதிய ஆழ்குழாய்‌ அமைக்க, பழுதடைந்த ஆழ்குழாய்‌ சரிசெய்வது குறித்தும் கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 37க்குட்பட்ட பகுதிகளில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌ திடீர்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 37க்குட்பட்ட கல்வீரம்பாளையம்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியின்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்துக் கேட்டறிந்து, அங்குள்ள அங்கன்வாடி மையம்‌ புதுப்பிக்கவும்‌, கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டவும்‌ அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, முருகன்‌ நகர்‌, தோப்பில்‌ நகர்‌, பாரதி நகர்‌, முத்து நகர் ஆகிய பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தபோது, அங்குள்ள பொதுமக்கள்‌ அப்பகுதிக்கு புதிதாக ஆழ்குழாய்‌ கிணறு அமைத்துத் தர வேண்டும்‌ என கோரிக்கையை ஏற்று, புதிய ஆழ்குழாய்‌ அமைக்கவும்‌, பழுதடைந்த ஆழ்குழாய்‌ சரிசெய்திடவும்‌, கோடைக் காலத்தில்‌ சீரான குடிநீர் விநியோகம்‌ செய்திட வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்‌.

பின்னர்‌, மருதாபுரம்‌ ஆரம்பப்பள்ளியின்‌ கட்டிடங்களை நேரில்‌ பார்வையிட்டு, அப்பள்ளியில்‌ தேவைக்கேற்ப கூடுதல்‌ வகுப்பறை கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக பொறியாளர்களிடம்‌ கேட்டறிந்தார்கள்‌. பின்பு நஞ்சப்பன்‌ வீதியில்‌ அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கூடம்‌ கட்டிடத்தை ஆய்வு செய்தபோது, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அப்பள்ளியில்‌ காம்பவுண்ட்‌ சுவர் கட்டித்தர வேண்டும்‌ என்ற அங்குள்ள பொதுமக்களின்‌ கோரிக்கையை ஏற்று காம்பவுண்ட்‌ சுவர்‌ கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என உறுதியளித்தார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, வடவள்ளி முன்னாள்‌ பேரூராட்சி தலைவர் வ.ம.சண்முக சுந்தரம்‌, 37வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ குமுதம்‌ குப்புசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ திருகல்யாணசுந்தரம்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...