ஜி.எஸ்.டிக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்திடக் கோரி டாக்ட் சங்கத்தின் சார்பில் மனு..!

மத்திய நிதி அமைச்சர்‌ நிர்மலா சீதாராமனிடம் டாக்ட் சங்கத்தின் சார்பில் ஜி.எஸ்.டிக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.


கோவை: ஜி.எஸ்.டி.க்கான அபராத வட்டி தள்ளுபடி செய்திடக் கோரி டாக்ட் (TACT) சங்கத்தின் சார்பில் மத்திய நிதி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்ட் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்களின்‌ விண்ணப்பத்தை கருணை உள்ளத்தோடு பரிசீலித்து தொழில்‌ நெருக்கடியிலும், நிதி நெருக்கடியிலும்‌ உள்ள குறு சிறு தொழில்களை பாதுகாக்க 2017ம்‌ ஆண்டு முதல்‌ 2021ம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ வரைக்கான GST கட்ட கால தாமதத்துக்காக வசூலிக்கப்படும்‌ அபராத வட்டிகளை தள்ளுபடி செய்திட தங்களிடம்‌ கோருகிறோம்‌.

ஜாப்‌ஆடர்கள்‌ மற்றும்‌ உதிரிபாகங்கள்‌ தயாரித்துக் கொடுக்கும்‌ குறு, சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌ ஆடர்கள்‌ தரும்‌ நிறுவனங்களுக்கு செய்து கொடுக்கும்‌ பொருள்களுக்கான பில்‌ தொகை 90 நாட்களில்‌ இருந்து 180 நாட்கள்‌ வரை காலம்‌ தாமதம்‌ செய்து தருவதால்‌ தான்‌ குறு, சிறு தொழில்‌ முனைவோர்களால்‌ அரசு நிர்ணயித்த தேதியில்‌ GST கட்ட முடியாமல்‌ காலம்‌ தாழ்த்தி கட்டும்‌ நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம்‌.

நாங்கள்‌ 8 சதவீதம்‌ முதல்‌ 10 சதவீதம்‌ வரை லாபம்‌ வைத்து தொழில்‌ செய்து வரும்‌ நாங்கள்‌ GST காலம்‌ தாழ்த்தி கட்டிய போதும்‌ அதற்கான காலம்‌ தாமதத்துக்கு அடுத்து அடுத்து வரும்‌ மாதங்களில்‌ கால தாமதத்துக்கான தொகையாக நாள்‌ ஒன்றுக்கு ரூ. 50 செலுத்தி உள்ள சூழ்நிலையில்‌ 2017 முதல்‌ 2021 வரைக்கான அபராத வட்டிகள்‌ கட்ட சொல்லி வணிகவரி துறை அதிகாரிகள்‌ கடுமையான நெருக்கடிகளை குறு, சிறு தொழில்‌ முனைவோர்களுக்கு இப்பொழுது கொடுத்து வருகின்றார்கள்‌. 2017ம்‌ ஆண்டு முதல்‌ அபராத வட்டியாக நாட்களை கணக்கிட்டு செலுத்திய GST தொகை கணக்கில்‌ எடுத்து 18 சதவீதம்‌ அபராத தொகை செலுத்திட வழியுறித்தி வருவதால்‌ என்ன செய்வது என்று அறியாமல்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ உள்ளனர்.

கடுமையான நிதி நெருக்கடிகள்‌, இரண்டு வருடம்‌ கொரோனா பாதிப்பால்‌ தொழில்‌ முடக்கம்‌, கடுமையான மூலப்பொருள்‌ விலையேற்றம்‌ இவைகள்‌ அனைத்தும்‌ குறு, சிறு தொழில்களை முடக்கி உள்ள இந்த சூழ்நிலையில்‌ அரசு அபராத வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்திட தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

தங்கள்‌ அரசு குறு, சிறு தொழில்களை பாதுகாக்க அபராத வட்டிகளை உடனடியாக தள்ளுபடி செய்வதுடன்‌ உடனடியாக அதிகாரிகளின்‌ கெடுபிடியில்‌ இருந்து எங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...