கோவையில் 69 கடைகளில் இருந்து 423 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்..!

மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த 15 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 69 கடைகளில் இருந்து 423 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சில கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 7 குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்படி, கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, விளாங்குறிச்சி சாலை, மசக்காளிபாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், குனியமுத்தூர், துடியலூர், சரவணம்பட்டி, சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய இடங்களில் வணிக வளாகங்கள், மசாலா தயாரிக்கும் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 69 கடைகளில் இருந்து 423 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 41 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 உட்பிரிவு 55, 63-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த 15 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...