பொள்ளாச்சி அருகே 19 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - காதலன் கைது..!

கைது செய்யப்பட்ட காதலன் கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலனை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு. இவரது மகள் நிவேதா(19).

இவர் கடந்த 12ம் தேதி வீட்டில் தனக்கு தானே மண்ணென்னையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பலத்த தீக்காயங்களுடன் இருந்த நிவேதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம், குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கிபாளையம் போலீசார் நிவேதாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, தேவராயபுரத்தைச் சேர்ந்த உறவினர் கார்த்தி என்பவர் காதலித்து வந்ததாகவும், பலமுறை இருவரும் வெளியில் சென்று உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர், திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதால் கார்த்தி மறுத்து உள்ளார். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிவேதா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



இதனையடுத்து, கார்த்தியை கைது செய்த போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

கார்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...