வெகு விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்..!

ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.


கோவை: வெகு விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.



கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.



இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய சிவன் கூறியதாவது:-



குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு தற்போதைய முதலமைச்சர் மற்றும் கனிமொழி ஆகியோர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முயற்சி எடுத்தார் எனவும், 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 1,200 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமையும் போது, சிறிய அளவிலான ராக்கெட்டுகள் எளிதாக செலுத்த ஏதுவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், குலசேகரபட்டினம் மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்கள் எளிதாக கிடைக்கும் எனவும் தமிழக அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

வெகு விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த சிவன், பருவ நிலை மாற்றம் என்பது ஒரு உலகளாவிய மிகப்பெரிய சவால். அதை எதிர்கொள்வதற்கும் சரி, அதை உன்னிப்பாக கவனிப்பதற்கும் நமது இந்திய அரசாங்கம் விண்வெளி ஆராய்ச்சி மூலம் தொடர்ந்து பல கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...