கோவை மணியகாரம்பாளையத்தில்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ துவங்கி வைத்துஆய்வு..!

மேலும், சீரான குடிநீர் விநியோகம்‌ செய்யுமாறு உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19க்குட்பட்ட மணியகாரம்பாளையத்தில்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌, பாலமுருகன்‌ நகா்‌, அசோக்‌ நகர்‌, அம்மன்‌ நகர்‌, 146 காலனி, அம்மன்‌ நகர்‌ பூங்கா, அசோக்‌ நகர்‌ பூங்கா ஆகிய இடங்களில்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌, பாலமுருகன்‌ நகர்‌, அம்மன்‌ நகர்‌, அசோக்‌ நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ உள்ள பூங்காக்களை சீரமைத்து, அப்பகுதியில்‌ ஆர்வமுள்ள குடியிருப்போர்‌ நலச்சங்கத்திடம்‌ வழங்கிட அறிவுறுத்தினார்‌. சீரான குடிநீர் விநியோகம்‌ செய்யுமாறு உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, அப்பகுதியின்‌ சாலையோரங்களில்‌ உள்ள செடி கொடிகளை அகற்றுதல், தேங்கிய குப்பைகளை அகற்றுதல்‌, மழைநீர்‌ வடிகால்‌ கால்வாயில்‌ தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றிடவும்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌. மேலும்‌, சிறப்புத்தூய்மைப்பணியின்‌ மூலம்‌ சேகரமாகும்‌ குப்பைகளை உடனடியாக வாகனம்‌ மூலம்‌ ஏற்றி அப்புறப்படுத்த அறிவுறுத்தினார்‌.



இந்த ஆய்வின்போது, 31வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ வைரமுருகன்‌ என்கிற முருகன்‌, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ (பொ) விமலா உதவி பொறியாளர்‌ இளங்கோவன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...