பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி - பதைபதைக்கும் வீடியோ வைரல்..!

உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அருகே உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.



பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் வெள்ளாளபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (45) இவர் முட்டைகளை பாதுகாக்கும் அட்டைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் வியாபாரம் சம்பந்தமாக பொள்ளாச்சியிலிருந்து உடுமலை நோக்கி இரு சக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டு இருந்தார். 



அப்போது நல்லம்பள்ளி பிரிவு அருகே சென்ற போது பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்ட அய்யாசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



சம்பவ இடத்துக்கு விரைந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 



மேலும், பேருந்து ஓட்டுனர் செந்தில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் விபத்து நடந்தது பதிவாகியுள்ளது. பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து உடுமலை சாலையில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. 



இருசக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்த அய்யாசாமி நிலைதடுமாறி பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...