தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்னரே காற்றாலை மின் உற்பத்தி சீசன் துவக்கம்..!

நடப்பு ஆண்டுக்கான சீசனிலும் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் 31 வரை அதிகமான காற்றாலை மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.


கோவை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஒரு மாதத்திற்கு முன்னரே துவங்கியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங்கியுள்ளது.

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:-



நடப்பாண்டு தென்கிழக்கு பருவக்காற்று மார்ச் 15 முதல் துவங்கியது. மார்ச் 20 அன்று நாள் முழுவதும் காற்று சீரான முறையில் வீசியது. இதனால் அன்றைய தினம் 47.7 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

மார்ச் 21 திங்கட்கிழமை 35.9 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று மார்ச் 22 சீரான அளவில் காற்று வீசி வருகிறது. 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை கடந்த ஆண்டு சீசன் உள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தான் சீசன் துவங்கும்.

ஆனால், இந்தாண்டு ஐந்து வாரங்களுக்கு முன்பே சீசன் மார்ச்சில் துவங்கி உள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31 வரை கடந்த ஆண்டு சீசன் கணக்கு உள்ளதால் 11 லட்சம் யூனிட் மின்சாரம் 2021- 22 ஆண்டில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோல், நடப்பு ஆண்டுக்கான சீசனிலும் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் 31 வரை அதிகமான காற்றாலை மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, கஸ்தூரி ரங்கையன் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...