மேலும், கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையம் தேர்வு.
கோவை: கோவை சரகத்தில் சிறந்த காவல் உட்கோட்டமாக மேட்டுப்பாளையம் உட்கோட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ், சுழல் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17ம் தேதி கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.க.ப அவர்களின் தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சிறந்த புலனாய்வு, நீதிமன்றத்தில் அதிகப்படியான வழக்கு முடித்தல், நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றுதல், பழங்குற்றவாளிகளை கைது செய்தல், சட்ட ஒழுங்கை பராமரித்தல் உள்ளிட்ட அம்சங்களுக்காக மாதந்தோறும் சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில், மேற்கண்ட அம்சங்களுக்காக கோவை மாவட்டத்தில் சிறந்த உட்கோட்டமாக மேட்டுப்பாளையம் உட்கோட்டம் தேர்வு செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் அவர்களுக்கு சுழல் கோப்பையினை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதேபோல, கோவை சரகத்தில் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் சிறந்த உட்கோட்டமான தேர்வு செய்யப்பட்டு, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர்மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
அதேபோல, கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையமாகவும், கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் ஆய்வாளராக மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுழல் கோப்பையினை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.
மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் அதிகப்படியான வழக்குகள் முடித்ததற்காக சிறந்த நீதிமன்ற காவலராக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நீதிமன்ற அலுவல் புரிந்து வரும் காவலர் தாமோதரன் அவர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் பரிசையினை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கி பாராட்டி உள்ளார்.
மேலும், இக்கூட்டத்தில் நீதிமன்ற அலுவல் புரிந்துவரும் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் அவர்களுக்கும், தலைமைக் காவலர் சுந்தர்ராஜன் அவர்களுக்கும், தலைமைக் காவலர் சுரேஷ் அவர்களுக்கும் மற்றும் தலைமை காவலர் வேணுகோபால் ஆகியோர்களுக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டி உள்ளார்.
அவ்வாறு பரிசுபெற்ற அனைவரும் இன்று 22.3.2022-ம் மேட்டுப்பாளையம் கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் K.S.S. சிவா B.A, B.L.., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பரிசு பெற்ற அனைவரையும் மேட்டுப்பாளையம் கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் K.S.S. சிவா B.A, B.L.., அவர்கள் பாராட்டி வாழ்த்தியதுடன். அனைவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.