கோவையில் சாக்கடை கால்வாயில் தூய்மை பணியாளர்களே நேரடியாக இறங்கி கழிவகற்றும் அவலம்..!

உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கி அடைப்பைச் சுத்தம் செய்ய தூய்மை பணியாளரை, மேற்பார்வையாளர் கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கத் தொழிலாளியை வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்திய மேற்பார்வையாளர் குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலானதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட செல்வபுரம் 78-வது வார்டு பகுதியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களாக சுப்ரமணி, தருமன், செந்தில்குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

அங்குள்ள ஆலமரமேடு பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து, மூவரையும் அடைப்பை நீக்குமாறு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராம் மற்றும் மேற்பார்வையாளர் மாணிக்கம் ஆகியோர் கூறியுள்ளனர்.

சாக்கடைக்கு உள்ளே இறங்காமல் அடைப்பை நீக்க முடியாது என பணியாளர்கள் கூறிய நிலையில், மேற்பார்வையாளர் மாணிக்கம் அடைப்பை நீக்கத்தான் உங்களை பணியில் வைத்துள்ளோம், இறங்கி சுத்தம் செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து சுப்ரமணி, உரியப் பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கி தனது வெறும் கைகளால் குப்பைகளை அகற்றி, அடைப்பை நீக்கியுள்ளார்.

இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து, சுப்ரமணி உள்ளிட்ட மூவரையும், தங்களது விருப்பத்தின் பேரில் தான் சாக்கடைக்குள் இறங்கியதாகக் கையெழுத்திட்டுத் தருமாறு மாணிக்கம் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இது குறித்து பேசிய சுப்ரமணி, வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் சிலர் அழைத்து உங்களை வேலையிலிருந்து வெளியேற்றிவிடுவோம் என கூறுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...