30-ஆம் தேதி கோவை மாநகராட்சி மண்டல தலைவருக்கான மறைமுக தேர்தல்..!

மாநகராட்சியில் உள்ள 5-மண்டலங்களுக்கும் மண்டல தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 30-ந் தேதி காலை 9.30-மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 5-மண்டலங்களின் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

கோவை மாநகராட்சி மொத்தம் 100-வார்டுகளை கொண்டு உள்ளது. இதில் நிர்வாக வசதிக்காக தலா 20-வார்டுகளை கொண்ட வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளில் 96- வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 3-இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. எனவே மண்டல தலைவர்கள் பதவிகளை தி.மு.க. கூட்டணியினர் முழுவதுமாக கைப்பற்றுவார்கள்.

இந்த மண்டல தலைவர்கள் தேர்தல் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகராட்சியில் உள்ள 5-மண்டலங்களுக்கும் மண்டல தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 30-ந் தேதி காலை 9.30-மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும்.

விருப்பம் உள்ள கவுன்சிலர்கள் தங்களது வேட்பு மனுக்களை அன்றைய தினம் தாக்கல் செய்யலாம். இந்த வேட்பு மனுவில் ஒரு கவுன்சிலர் முன்மொழிந்திருக்க வேண்டும். அதேபோல் மற்றொரு கவுன்சிலர் வழிமொழிய வேண்டும்.

ஒரே ஒரு நபர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவராக அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்டவர் வேட்புமனு தாக்கல் செய்தால், அந்த மண்டலத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள் ரகசியமாக வாக்களித்த மண்டல தலைவர்களைத் தேர்வு செய் வார்கள்.

இதுதவிர மாநகராட்சியில் கணக்குகள் குழு, கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதான குழு, சுகாதார குழு, வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு, பணிகள் குழு ஆகிய நிலைக்குழுக்கள் உள்ளன.

இந்த 6-குழுக்களின் உறுப்பினர்கள் தேர்தல் வருகிற 30-ந் தேதி மதியம் 2.30-மணிக்கு நடைபெறும். இதில் கணக்குகள் குழு, கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதான குழு, சுகாதார குழு ஆகிய குழுக்களில் தலா 9-உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தலா 5- உறுப்பினர்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மீதம் உள்ள வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு, பணிகள் குழு ஆகிய குழுக்களுக்கு தலா 15-உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தலா 8- உறுப்பினர்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து 31-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு மேற்கண்ட குழுக்களின் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் அந்தந்த குழு உறுப்பினர்கள் குழுவின் தலைவர்களைத் தேர்வு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...