கோவை சரவணம்பட்டி, சிங்காநல்லூர் பகுதியில் பாலம் கட்டுவதற்காக 221-கோடி ஒதுக்கீடு.!!

சிங்காநல்லூர் பகுதிக்கு 141-கோடியே 80-லட்சமும், சரவணம்பட்டியில், காளப்பட்டி ரோடு சந்திப்பு, துடியலூர் ரோடு சந்திப்பு இரண்டையும் இணைக்கும் வகையில் 80-கோடியே 48-லட்சம் ஒதுக்கீடு.


கோவை: கோவை சரவணம்பட்டி, சிங்காநல்லூர் பகுதியில் பாலம் கட்டுவதற்காக 221-கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரினை மூன்று தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கின்றது. இதில் ஒரு சாலை மட்டுமே புறவழிச்சாலை ஆகவும், மற்ற இரண்டும் மாநகரினை ஊடுருவிச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இந்த போக்குவரத்து நெரிசலைச் சீர் அமைப்பதற்காக உக்கடம் ஆத்துப்பாலம் இடையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைப்பட்டு வருகின்றது.

மேலும் திருச்சி ரோட்டில் சுங்கம் பகுதியில் பாலம் கட்டும் பணியானது முடியும் தருவாயில் உள்ளது. மேட்டுப்பாளையம் ரோட்டிலும் இரண்டு பாலங்கள் புதிதாகக் கட்டும் பணியானது துவங்கியுள்ளது.

சுந்தராபுரம் சந்திப்பு, எல்லாண்டிபுரம் சந்திப்பு, கணபதி சந்திப்பில் மூன்று பாலங்கள் கட்டும் பணிக்கான ஒப்புதலும் நிதியையும் மத்திய போக்குவரத்து அமைச்சகத்தால் கடந்த மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், இதற்கான பணிகள் தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி சிங்காநல்லூர் பகுதிகளில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டினை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செய்துள்ளது.

சிங்காநல்லூர் சந்திப்பில் பாலம் அமைப்பதற்காக 141 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சரவணம்பட்டியில் , காளப்பட்டி ரோடு சந்திப்பு, துடியலூர் ரோடு சந்திப்பு இரண்டையும் இணைக்கும் வகையில் 80 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, மொத்தம் 221 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...