22-வது வார்டில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: கவுன்சிலர் கோவை பாபு வாக்குறுதி..!

22-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசுப்பள்ளிகளில் காணப்படும் குறைகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.


கோவை: 22-வது வார்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என, மேலாண்மை குழுக் கூட்டத்தில் கவுன்சிலர் கோவை பாபு வாக்குறுதி அளித்தார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மைக் குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் நிறை, குறைகள் குறித்துப் பெற்றோர்கள் பேசினர்.



இதுகுறித்து கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு பேசியதாவது:-

தமிழகத்தில் மக்களின் பேராதரவுடன் ஆட்சி பொறுப்பேற்று சீரான முறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட தமிழக கல்வித்துறை சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசுப்பள்ளிகளில் காணப்படும் குறைகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு கவுன்சிலர் கோவை பாபு தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...