வீட்டிலிருந்த 83 வயதான சென்னிமலை என்பவர் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்சிக் கொண்டிருந்துள்ளார், அப்போது அங்கிருந்த தொட்டி அருகே படுத்திருந்த பாம்பை, கயிறு என நினைத்து கையில் எடுத்த போது, பாம்பு அவரை கடித்தது.
கோவை: கோவையில் முதியவர் ஒருவர், கயிறு என்று நினைத்து பாம்பை பிடித்ததால், அந்த பாம்பு அவரை கடித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் தீத்திபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பேரூர் தீத்திபாளையம் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது தந்தை சென்னிமலை கவுண்டர் மற்றும் மனைவி இரண்டு பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். மேலும், பழனிச்சாமி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி டைலர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வீட்டிலிருந்த அவரது தந்தை வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்சிக் கொண்டிருந்துள்ளார், அப்போது ங்கிருந்த தொட்டி அருகே சென்றுள்ளார். பக்கெட்டை எடுத்தபின், அங்கு படுத்திருந்த பாம்பை, கயிறு என நினைத்து கையில் எடுத்ததாக தெரிகிறது.
அப்போது, அவரை அந்த பாம்பு கடித்து உள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக அவரது மகன் பழனிச்சாமிக்கு தகவல் அளித்தார்.வீட்டிற்கு வந்த பழனிச்சாமி, 108 ஆம்புலன்ஸ் மூலம் தந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, அவர் மாலை 4.30 மணி அளவில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.