2-இளம்பெண்கள் கடத்தல்: தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியரை கைது செய்த கோவை போலீசார்.!!

இரண்டு இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி கடத்திய முன்னாள் ஆசிரியரை தேடி வந்த நிலையில் 8-மாதங்களுக்குப் பின்பு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இரண்டு இளம்பெண்களையும் மீட்டுள்ளனர்.


கோவை: இரண்டு இளம் பெண்கள் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆசிரியரை 8-மாத தேடலுக்குப் பின்னர் கோவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இரண்டு இளம்பெண்களையும் மீட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் என்கிற சின்னதம்பி. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியுடனான கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் A to Z என்ற நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவானார். இதனால் ஒழுங்கீன நடவடிக்கையாக அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் குடியிருந்தபடியே தான் ஒரு நடன ஆசிரியராக இருப்பதாக அப்பகுதி மக்களை நம்பவைத்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-வயது சிறுமியைக் கடத்திச் சென்ற ஆசிரியர் மணிமாறன் சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் தங்கியிருந்தார். அப்போது, அங்கிருந்த ஒரு 19-வயது இளம் பெண்ணையும் அழைத்துக்கொண்டு தலைமறைவானார்.



சிறுமி உட்பட இருவருடன் ஆசிரியர் மணிமாறன் தலைமறைவான நிலையில், கோவை மற்றும் கன்னியாகுமரியில் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மூவர் குறித்தும் தகவல் எதுவும் கிடைக்காததால் 8-தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடப்பட்டு வந்தனர்.

இதனிடையே, கன்னியாகுமரி இளம் பெண் தனது வீட்டினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் திருப்பதியில் இருப்பதாகவும், தங்களை டீ விற்க வைத்து ஆசிரியர் மணிமாறன் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அழுதுள்ளார்.

இந்த தகவல் அறிந்த தனிப்படை காவல்துறையினர், திருப்பதிக்குச் சென்று, அங்கு தங்கியிருந்து தலைமறைவாக இருந்த ஆசிரியர் மணிமாறனைக் கைது செய்த தனிப்படை போலீசார் சிறுமி உட்பட இருவரையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிமாறனைக் கோவை அழைத்து வந்த தனிப்படை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

16-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திய நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிமாறனைத் தேடி வந்த நிலையில் 8-மாதங்களுக்குப் பின்பு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...