வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கற்களை வீசி வகுப்பறையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.!!

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அரசு பள்ளி கட்டடங்களின் சுற்றுச் சுவர்களை உயர்த்தி கட்டவும், இரவு நேரக் காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி நகராட்சி தலைவர் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி வடுகபாளையம் நகராட்சிநடுநிலைப்பள்ளியில், நள்ளிரவு, மர்ம நபர்கள் கற்களை வீசி வகுப்பறையைச் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலை பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து வழக்கம்போல் ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை பள்ளியை திறந்து வகுப்பறைக்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் கற்களை வீசி மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் கழிவறைகள் சேதப்படுத்தப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, அங்கு விரைந்த நகரமன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், ஆணையாளர் தானு மூர்த்தி, பொள்ளாச்சி மேற்கு போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இரவு நேரத்தில் பின்பக்கமாக நுழைந்த மர்ம நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பள்ளி வகுப்பறைகள் சேதப்படுத்தியது தொடர்பாக, தலைமை ஆசிரியர் பொள்ளாச்சி நேற்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமலா நவநீதகிருஷ்ணன்கூறுகையில், நகராட்சி பள்ளியை சேதப்படுத்திய நபர்களை பிடிக்க காவல்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அரசு பள்ளி கட்டடங்களின் சுற்றுச் சுவர்களை உயர்த்தி கட்டவும், இரவு நேரக் காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...