உலக வன நாள்: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றில் மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாட்டம்.!!

இதில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ-மாணவிகள், கலந்து கொண்டு மலைவாழ் மக்களுடன் சேர்ந்து நடனமாடி அசத்தினார்.


கோவை: உலக வன நாளை முன்னிட்டு பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றில் மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாடினர்.

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வருடம்தோறும் உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில், உலக வன நாளை முன்னிட்டு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, அங்கு மஞ்சப்பைகளைத் தோரணமாகக் கட்டி தொங்கவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவிகள் கவியருவி அருகேமரக்கன்றுகளை நட்டினர். இதேபோல, உலக வன நாளை முன்னிட்டுடாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடி பாட்டுப் பாடினர்.

இதில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகள், கலந்து கொண்டு மலைவாழ் மக்களுடன் சேர்ந்துநடனமாடி அசத்தினார்.

இந்த நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், வன உதவி பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் காசிலிங்கம், வனவர்கள் பிரபாகரன், சபரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...