கோவை கிணத்துக்கடவு அருகே சாலையை கடக்க முயன்ற வணிகவரித்துறை அலுவலக ஊழியர் கார் மோதி பரிதாபமாக பலி..!

இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சாலையை கடக்க முயன்ற வணிகவரித்துறை அலுவலக ஊழியர் கார் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மோதிராபுரம், ஜெகஜீவராம் வீதியை சேர்ந்தவர் சித்திரகுமார் (45). இவர் பொள்ளாச்சி வணிக வரித்துறையில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு லதாடெய்சிராணி (41) என்ற மனைவியும், தமிழ்மணி, செவந்தமணி (19) மகாலட்சுமி (17) என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தமிழ்மணி கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் சக்தி நகரில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் பொள்ளாச்சியில் இருந்து சித்திரகுமார் குடும்பத்துடன் கிணத்துக்கடவு சக்திநகர் பகுதியில் உள்ள மகள் தமிழ்மணி வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர், பொள்ளாச்சி செல்ல மனைவி மற்றும் மகள்கள் இருவரும் முன்னதாக காரில் சென்று அரசம்பாளையம் பிரிவில் காத்திருந்திருந்தனர்.

இதனையடுத்து மகள் தமிழ்மணி வீட்டில் இருந்து சித்திரகுமார் ஜெயபிரகாஷ் என்பவருடன் பைக்கில் வந்து அரசம்பாளையம் பிரிவு விநாயகர் கோவில் முன்பு இறங்கி எதிரே உள்ள காருக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் சித்திரகுமார் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சித்திரகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையடுத்து, அங்கு சித்திரகுமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...