கோவை அன்னூரில் 5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி ஆசிரியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


கோவை: கோவை அன்னூரில் 5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 10 வயது மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மாணிக்க சுந்தரம் (47) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமையாசிரியர் அன்னூர் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அன்னூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி ஆசிரியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அன்னூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...