கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 9,800 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக தகவல்.
கோவை: கோவை மாநகர் பகுதியில் உள்ள தபால் நிலையங்களில் மட்டும் இதுவரை 80,000 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
கோவை கூட்செட் சாலையிலுள்ள தலைமை அஞ்சலகத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 100 பெண் குழந்தைகளுக்கு தனியார் நிறுவன உரிமையாளர் பங்களிப்பில் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டது.
அதற்கான கணக்கு புத்தகங்களை குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் அஞ்சலக அதிகாரிகள் வழங்கினர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய கோவை மண்டல அஞ்சல் அதிகாரிகள் கூறும்போது:-
கோவை மாநகர் பகுதியில் மட்டும் 89 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 9,800 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 முதல் தற்போது வரை சுமார் 80 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் தனியார் நிறுவன உரிமையாளர் கூறும்போது:-
தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் நூறு குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தனது பங்களிப்போடு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஆண்டு சுமார் 1000 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் தனது பங்களிப்போடு வங்கிக் கணக்கு துவக்க உள்ளதாக தெரிவித்தார்.