ஹிஜாப் தடை விவகாரம் - கர்நாடக அரசைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்..!

திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: ஹிஜாப் தடை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்து கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் திராவிடர் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், இசுலாமிய இயக்கங்கள் உள்ளிட்ட 17 இயக்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதைக் கண்டித்தும், இத்தடையை விலக்க கோரியும், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறுத்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெண்மணி கூறியதாவது:-

நாட்டில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நாடு முழுவதும் அமல்படுத்த முயலும் சங்பரிவார அமைப்புகளுக்கும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக உள்ளதாகவும், மதுரையில் ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளரை அச்சுறுத்திய நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது போன்ற நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...