கோவை பேரூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பால்வியாபாரி உட்பட இருவர் பலி…!

இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பேரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பால் வியாபாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். பால் வியாபாரியான இவர் நேற்று மாலை பேரூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் எடுக்க சென்றார். இதையடுத்து, இவர் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, சிறுவாணி சாலை பேரூர் அருகே சென்ற போது, மாதம்பட்டியிலிருந்து செல்வபுரம் நோக்கி, தனது 2 நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ், நாகராஜ் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதாக தெரிகிறது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷ் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...