கோடைக்கால மின் தேவையைப் பூர்த்தி செய்யச் சூரிய ஒளி மின் உற்பத்தியில் சேமிப்பு வசதியை ஏற்படுத்த மத்திய மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. பகலில் உற்பத்தி செய்யும் மின்சாரம் இரவில் பயன்படுத்தலாம்.
கோவை: சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறையில் சேமிப்பு வசதியை ஏற்படுத்தி மின்சாரத்தை வினியோகிக்க மத்திய மாநில அரசு முடிவு செய்திருப்பதைத் தமிழக சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறை மிக முக்கிய பங்கு வைக்கின்றன. தமிழகத்தில், காற்றாலை மின் உற்பத்தி பிரிவில் 8,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய உதவும் வகையில் கட்டமைப்பு மற்றும் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தித் துறையில் 4,000 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
தமிழகத்தில் கோடைக்காலத்தில் மின் தேவை பகல் மற்றும் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தினமும் 15,000 மெகாவாட்டும் அதிகமாக மின் நுகர்வு செய்யப்படும்.
தவிர இரவு நேரங்களில் தொடர்ந்து தொழிற்சாலைகள் செயல்படும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சமீபத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறையில் அனைத்து மின் உற்பத்தியாளர்களும் சேமிப்பு வசதியை ஏற்படுத்தி அவற்றை இரவு நேரங்களில் பயன்படுத்த வினியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(TANSPA), பொருளாளர், சாஸ்தா எம் ராஜா கூறியதாவது:-
காற்றாலை மின் உற்பத்தி என்பது தமிழகத்தில் ஆண்டுதோறும் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் சீசனில் மட்டுமே கிடைக்கும். ஆனால் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் பணி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும். தற்பொழுது பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பகலிலேயே மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறையில் சேமிப்பு வசதியை ஏற்படுத்தி பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இரவு நேரங்களில் வினியோகிக்க முடிவு செய்துள்ளனர்.
சேமிப்பு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த மின் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது போன்ற ஒரு திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இன்றைய சூழலில் தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சேமிப்பு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தக் கூடுதல் நிதி தேவைப்படும்.
தற்பொழுது பகலில் வழங்கப்படும் மின்சாரத்தைத் தமிழக அரசு கூடுதல் விலைக்கு(Premium Rate) பெற்றுக்கொள்கிறது. அதேபோல் சேமிப்பு செய்து வழங்கப்படும் மின்சாரத்துக்கு(30% Premium Rate) கூடுதல் விலைக்கு வாங்க அரசு முன்வந்தால் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களும் சேமிப்பு கட்டமைப்பு வசதியை உடனடியாக ஏற்படுத்த முன்வருவார்கள்.
இதனால் தமிழக அரசுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட்டால் சேமிப்பு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தும் பணியை அனைத்து மின் உற்பத்தியாளர்களும் தொடங்குவார்கள்.
இவ்வாறு, சாஸ்தா எம் ராஜா தெரிவித்தார்.