நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி நரிக்குறவர் மக்கள் மனு.!!

கோவை துடியலூர் பகுதியில் உள்ள புது முத்து நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி நரிக்குறவர் மக்கள் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் 65-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40- ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும், தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு கோரி கடந்த 10-ஆண்டுகளாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.



மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் இல்லையெனில் சாலை மறியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறினர்.



தங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க அப்பகுதியில் உள்ள அதிமுகவை சேர்ந்த அனுபவ்ரவி என்பவர் தடையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...