அரசு நிறுவனத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் சுமைப்பணி தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.!!

கழிவறை, ஓய்வறை குடிநீர், சீருடை என்ற எந்த வசதிகளும் இல்லை எனவும் கொத்தடிமைகள் போல் கடந்த 30 ஆண்டுகளாக உழைப்பைச் சுரண்டி வருகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.


கோவை: மத்திய அரசின் ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் கிடங்கில் பணியாற்றிவரும் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, இ.எஸ் ஐ உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கூறி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் (VSP) நிறுவனத்தின் கிடங்கு பீளமேட்டில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் அங்கு 25 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கும், நிறுவனத்தில் நடந்த விபத்தின் காரணமாக வேலை செய்ய முடியாதவர்களுக்கும் எவ்விதமாக இழப்பீடும் வழங்க வில்லை என்றும் 30 ஆண்டுகள் வேலை செய்த பின்பும் முறையான ஊதிய விகிதமும், ஊதிய உயர்வும் அமலாக்கப்படவில்லை என தெரிவித்தனர்.



மேலும் இ.எஸ்.ஐ., பி.எஃப் அமல்படுத்தவில்லை. கழிவறை, ஓய்வறை குடிநீர், சீருடை என்ற எந்த வசதிகளும் இல்லை எனவும் கொத்தடிமைகள் போல் கடந்த 30 ஆண்டுகளாக உழைப்பைச் சுரண்டி வருகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...