குரும்ப பாளையம் அருகே டீசல் டேங்கர் லாரி - டூவீலர் மோதி விபத்து; பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலி..!

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் டீசல் டேங்கர் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: குரும்ப பாளையம் அருகே டீசல் டேங்கர் லாரி - டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளானைப்பட்டி கைக்கோளாம்பாளையம் வண்ணான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு(67). இவரது மகன் அருண்(19). தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார்.

இவர்கள் இருவரும் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். மாணவர் அருண் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, குரும்ப பாளையம் டூ காளப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே அசுர வேகத்தில் வந்த டீசல் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் வந்த லாரி கல்லூரி மாணவர் ஓட்டி வந்த டூவீலர் மீது பலமாக மோதியுள்ளது.

இதில் அருண் தூக்கி வீசப்பட்டுள்ளார். தூக்கி வீசப்பட்ட வேகத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்துள்ள இருவரையும் மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்துள்ளனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவர் அருணை அனுமதித்தனர். இந்நிலையில் அருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.



இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் டீசல் டேங்கர் லாரி டிரைவர் மாணிக்கத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டீசல் டேங்கர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...