"காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு"-விவசாயத்தை அழித்து வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

இம்மாநாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 10-மாவட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.


கோவை : மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 10 மாவட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட "காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு"-விவசாயத்தை அழித்து வரும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தென்திருப்பதி நால் ரோட்டில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் "காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு" நடைபெற்றது. இம்மாநாட்டில் கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட 10-மாவட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை யானை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நாசம் செய்வதோடு ஊருக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தியும் வருகின்றன. இதனால் வன விலங்குகளை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும், விளை நிலங்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவசாய சங்கத்தினர் மேடையில் பேசினர்.

மாநாட்டில் நாளை (21/03/22) முதல் ஒரு மாத காலம் வரை காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளும் தங்களது விளைநிலங்களுக்கு வந்து பயிர்களைச் சேதம் செய்யும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி கோரி வனத்துறைக்கு விண்ணப்பம் கொடுக்கப்படும்.

இந்த விண்ணப்பத்தை ஏற்று அபரிமிதமாகப் பெருகி உள்ள காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், விவசாயத்தைக் காப்பாற்றவும், விவசாயத்தைக் காப்பாற்றவும் காலதாமதம் இல்லாமல் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் விண்ணப்பத்திற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 3 வது வாரத்தில் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கக்கோரி வனச்சரக அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும், விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை ஏற்காவிட்டால் 3 மாத கால அவகாசத்திற்குப் பின்னர் ஜூலை மாதம் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் அடித்துக்கொல்ல முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல சட்டப்பூர்வமான அனுமதி கொடுத்தும் அதனை வனத்துறை நடைமுறைப்படுத்தாததால் காலம் தாழ்த்தி வருவதால் விவசாயிகளே காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளே தயாராவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், வனத்திலிருந்து வெளியே வரும் காட்டுயானைகளை வனத்துறையினரே சுட்டு மீண்டும் வனத்திற்குள் அனுப்ப வேண்டும்.அதேபோல் காட்டுப்பன்றிகளை விவசாயிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஜூலை 5 ஆம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு நடத்தில் அந்த மாநாட்டில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் எனவும், இந்த மாநாடு முடிந்தவுடன் தமிழக முதல்வரையும், வனத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து விவசாயிகளின் படும் கஷ்டங்கள் குறித்துத் தெரிவித்து தங்களது கோரிக்கை குறித்து வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஹரிமூர்த்தி,மாநிலச் செயலாளர் உதயகுமார்,மாநில போராட்டக்குழு தலைவர் ரகுபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து மாநாட்டிற்கு வந்த விவசாயிகளைப் பழங்குடியின மக்கள் வரவேற்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...