"லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகப் பெற்றிட வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்" என்று மநீம கட்சியினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கோவை: "லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகப் பெற்றிட வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்" என்று மக்கள் நீதி மய்யத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மநீம கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர்,கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அட்டை கடிகாரங்களை எடுத்து வந்தனர்.
அரசு அலுவலகங்ககுக்கு வரும் பொதுமக்கள் அலைக் கழிக்கப்படுவதாகவும், லஞ்சம் கொடுத்துதான் அரசு சேவைகளை பெறக்கூடிய சூழல் நிலவி வருகிறது என்றும்இதன் பின் புலத்தில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகவும், தெரிவித்தனர்.
மேலும், சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்பொழுது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசாங்கம் இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.