கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார்.
கங்கை கருங்குயில், கலை குழுவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், தெரு நாடகம் மூலம் கள்ளச்சாரயம் மற்றும் மதுபானத்தின் தீமைகள் குறித்து மக்களுக்கு புரியும்படி எளிய முறையில் எடுத்துரைக்கப்பட்டது. அதே போன்று, கதிரவன் கலைக்குழுவினர், எமதர்மன் சித்திரகுப்தன் வேடமணிந்துவிழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
மேலும், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தீமைகளான - நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மாரடைப்பு,நரம்பு தளர்ச்சி, மலட்டுதன்மை, குடும்ப தகராறு, அவப்பெயர் ஏற்படுதல், போன்றவை குறித்து விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
குறைதீர்ப்பு நாளான இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதால், மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.