கோவையில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலப் பத்திரத்தை வைத்து ரூ.97 லட்சம் மோசடி செய்த கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த, சுனில் கோபி என்பவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலப் பத்திரத்தை வைத்து ரூ.97 லட்சம் மோசடி செய்த கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சுனில் கோபி என்பவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை நவக்கரையில் வசித்து வருபவர், கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சுரேஷ் கோபி. இவரும், கோவை குனியமுத்தூரை சேர்ந்த மயில்சாமி என்பவரும் நண்பர்கள். இந்த நிலையில், மயில்சாமி கடந்த 2011 ஆம் ஆண்டு பண நெருக்கடியில் இருந்ததாக தெரிகிறது. அப்போது, நவக்கரையில் அவருக்கு சொந்தமான 4.25 ஏக்கர் நிலத்தை, சுனில் கோபி பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சுனில் கோபி அந்த நிலத்தை விற்க முயன்றதாக தெரிகிறது. இதனால், கடந்த 2016 மயில்சாமி, கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், சுனில் கோபி பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரத்தை நீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆனால், சுரேஷ் கோபி நீதிமன்ற உத்தரவை மறைத்து, கிரிதரன் என்பவருக்கு 4.25 ஏக்கர் நிலத்தை ரூ.97 லட்சத்து விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, கடந்த 2021செப்டம்பரில் பத்திரம் குறித்து இணையதளத்தில் பார்த்த போது, நிலம் சுனில் கோபி பெயரில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, கிரிராஜன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சுனில் கோபி மற்றும் அவரது நண்பர்களான ரீனா, சிவதாஸ் ஆகிய மூன்று பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், சுனில் கோபியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுனில் கோபி மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுரேஷ் கோபிக்கும் இதே பெயரில் தம்பி உள்ளதால், உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.