நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: கோவை மக்கள் "குசும்புகாரர்கள்" என்ற வார்த்தையை வாபஸ் பெறுகிறேன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!

கோவை மக்களை நம்ப முடியாது குசும்பு பிடித்தவர்கள் என்று கூறிய வார்த்தைகளை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியின் போது பேசினார்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம், பிரச்சாரத்தின் போது கோவை மக்களை நம்ப முடியாது குசும்பு பிடித்தவர்கள் என்று கூறிய வார்த்தைகளை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியின் போது பேசினார்.



கோவை நேரு நகர் சுகுணா ஆடிட்டோரியத்தில் திமுக சார்பில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 524-பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10-ஆயிரம் என, ரூ.52,40,000-பணம் மற்றும் 500-மகளிருக்குத் தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைக் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.



இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின்:

பாட்டிக்கும்,அம்மா, அக்கா என அனைவரும் என்னுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். எனக்கும் அனைவருடனும் செல்பி எடுக்க வேண்டும் என்றுதான் ஆசை, கடந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கோவை மக்களை நம்ப முடியாது குசும்பு பிடித்தவர்கள் என்று கூறிச் சென்றேன்.

அதனை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளை 96-வார்டுகளில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை வெற்றிபெறச் செய்தனர். அதே போல் 7-நகராட்சிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைக் கோவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

எனவே நான் கூறிய வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் அடிக்கடி கோவை வருவேன் என்று கூறினேன் அதேபோல் தற்போது வந்துள்ளேன்.

இந்த வெற்றியைப் பெறப் பாடுபட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பாக அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு மிகுந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். தலைவர் சொன்னதைப்போல 100% அல்ல 1000% செய்து காட்டுவேன் என்று கூறினார்.

அண்ணன் செந்தில் பாலாஜி அதே போல் செய்து காட்டியுள்ளார். இது அவருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல முதல்வரின் 8-மாத கால ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி, கோவை மாநகராட்சிக்குச் சிறப்பு நிதியாக ரூ.200-கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்குத் தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளனர் என கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்:

கோவையில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் வரப்பெற்ற கல்வி உதவித்தொகையின் அனைத்துமனுக்களுக்கும்கல்வி உதவித்தொகை, மற்றும் பெண்களுக்குத் தையல் எந்திரமும்மனுக்கள் இன்று வழங்கப்படுகின்றது. முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தைக் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.

100-சதவீதம் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதேபோல் முதல்வரின் சிறந்த ஆட்சியால் வெற்றி பெற்றோம். நடந்துமுடிந்த நிதிநிலை அறிக்கையில் கோவையில் 2-திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு வாழ்நாள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...