உயிரிழந்த ஆதரவற்ற முதியவருக்கு உரிய மரியாதை செய்த பேரூராட்சி தலைவரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கோவை: கோவை பேரூர் கோவில் அருகே உயிரிழந்த ஆதரவற்ற முதியவரின் உடலை உரிய மரியாதையுடன் அனுப்பி வைத்த பேரூராட்சி தலைவரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

கோவை பேரூர் பட்டீஸ்வரன் கோவில் அருகே ஆதரவற்ற முதியவர்கள் சிலர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருந்த முதியவர் ஒருவர் வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் பேரூர் போலீசுக்குத் தகவல் அளித்தனர். இதனிடையே தகவலறிந்து அங்கு வந்த பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை உயிரிழந்த முதியவருக்கு மாலை அணிவித்து வணங்கி உரிய மரியாதை செய்தார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசாரிடம்உடலை ஒப்படைத்தனர். இதையடுத்து, முதியவர் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த ஆதரவற்ற முதியவருக்கு உரிய மரியாதை செய்த பேரூராட்சி தலைவரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.