கலை நிகழ்ச்சிகள் மேளங்களை வாசித்தவாறு மலைக்கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடினர். இதனை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
கோவை: சர்வதேச வன நாளை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் நடைபெற்ற, இருளர் மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகழித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி சர்வதேச வன நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச வன நாளை கொண்டாடும் விதமாகக் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் நேற்று சிறுவாணி மலைத்தொடரில் காணப்படும் பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை குற்றாலம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகள் மேளங்களை வாசித்தவாறு மலைக்கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடினர். இதனை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.