எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பதற்கான ஆயத்த கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பதற்கான ஆயத்த கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்பேரில் தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பதற்கான ஆயத்த கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று 20.03.2022 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெற்றோர்களுக்குப் பள்ளி மேலாண்மைக் குழுவின் அவசியமும், அதில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும்,
அதற்குரிய வழிகாட்டுதல் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்குப் பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம் மற்றும் பள்ளி வளர்ச்சி சார்ந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு பொதுமக்கள் தங்களுடைய பங்களிப்பை நமக்கு நாமே திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் வாயிலாகப் பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தினையும், மாணவர்கள் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக பன்முகத்திறன்களைக் கொண்டு வளர வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களையும், மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மாதிரிகளையும் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி கல்வி அலுவலர் கே.பாண்டிய ராஜ சேகரன், எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.