இவர்கள் கஞ்சப்பள்ளி கிராமத்தில் 3-ஜி கரைசல் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை செயல் விளக்கம் செய்து காட்டினார்.
கோவை: கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் அன்னூரில் தற்போது தங்கி உள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பா.சாருமதி, ஜெ.துர்காதேவி, ப.கீதாலட்சுமி, ஜோதி யாகன்டி , கு.கீர்த்தனா பிரியா, ரா.மின்னுஷா, ரா.முத்துச்செல்வி, செ.நந்தினி, மா.பிரியதர்ஷினி, அ.சிநேகா மற்றும் ஷ.ஸ்ரீநிதி ஆகிய 11-பேர் கொண்ட குழுவினர் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் அன்னூரில் தற்போது தங்கி உள்ளனர்.
இவர்கள் கஞ்சப்பள்ளி கிராமத்தில் 3-ஜி கரைசல் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை செயல் விளக்கம் செய்து காட்டினார். 3-ஜி கரைசல் என்பது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கரைசல் ஆகும்.

செயல்முறை: 18-கிராம் பூண்டு , 9-கிராம் பச்சை மிளகாய் மற்றும் 9-கிராம் இஞ்சி கொண்டு பேஸ்ட் செய்யப்படுகிறது. மூன்று பேஸ்ட்களும் 1-லிட்டர் தண்ணீரில் கரைக்கப்படுகின்றன. இந்த கலவையை நன்கு கிளறித் தெளிப்பதற்கு முன் வடிகட்டவும். இந்த சாற்றில் 500-மில்லி, 100-மில்லி சோப்பு கரைசல் மற்றும் 9.4-லிட்டர் தண்ணீருடன் தயாரிக்கப்பட்டு அதனைச் செடியின் மேல் தெளிக்கப்படுகிறது.
இதன் பயன்கள்: சுட்டுத் துளைப்பான், பழம் துளைப்பான், தண்டு துளைப்பான், முடி கொண்ட கம்பளிப்பூச்சி (முருங்கை குச்சியில்) மற்றும் காய்கறி பயிர்களின் படைப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் செய்து காட்டினர்.