திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வலம் வந்ததால் ஊட்டி நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளுகுளு காலநிலையை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்குப் படையெடுக்கின்றனர்.
ஊட்டியில், திரண்ட சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளுகுளு காலநிலையை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்குப் படையெடுக்கின்றனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், இத்தாலியன் கார்டன் மற்றும் பிரதான புல்தரை மைதானங்களில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். மலர் செடிகள் முன் நின்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ரோஜா பூங்காவில், ரோஜா மலர்களைக் கண்டு ரசித்தனர். ஊட்டி அருகே பைன்சோலை, சூட்டிங் மட்டம், குன்னுார் டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்டசுற்றுலா ஸ்தலங்களில், சுற்றுலாப் பயணிகள் இயற்கைக் காட்சியைக் கண்டு ரசித்தனர். திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வலம் வந்ததால் ஊட்டி நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.