கோவை வெள்ளியங்கிரி மலையேறிய 33 வயதான நபர் 5 ஆவது மலையில் சடலமாக மீட்பு..!

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (33) என்ற நபர் நேற்று பூண்டி வெள்ளியங்கிரி மலை 5 ஆவது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறிய 33 வயதான நபர் ஒருவர், 5 ஆவது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தொடர் 5 ஆவது மலையில் ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக ஆலாந்துறை காவல்துறையினர் மற்றும் அந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு, மலை அடிவாரத்தில் நின்றிருந்த 108 ஆம்புலென்ஸில் உள்ள மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பு குறித்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர், கோவை செல்வபுரம் சரோஜினி நகர் பகுதியை சேர்ந்த பெரியராஜ் என்பவரது மகன் சுகுமார் கண்ணன் (33)என்பதும், இவர் டவுன்ஹால் ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள தனியார் பலகாரக் கடையில் கடந்த 5 மாதங்களாக வேலை

செய்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும், சுகுமார் கண்ணனுக்கு மூன்று வருடங்களாக சர்க்கரை நோய் இருப்பதால் அதற்கு இன்சுலின் மருந்து செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று வீட்டில் யாருக்கும் தகவல்தெரிவிக்காமல், கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்காக தனியாக சென்றதாக தெரிகிறது.

அப்போது ஐந்தாவது மலை ஏறும்போது சுகுமார் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாகவும்,அப்போது அங்கு வந்த பக்தர்கள், மயக்க நிலையில் இருந்த சுகுமார் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளியங்கிரி மலைத் தொடர்களில் கடுமையான குளிர் நிலவி வருவதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...