உலக தலை காயம் தினம்: கோவையில் தலைகவச இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிவது அவசியம் என்றும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் போது விபத்து ஏற்பட்டால், தலைக்கு பலத்த காயம் ஏற்படுவது மட்டுமில்லை, உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: தலைக்காயம் ஏற்படுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக தலைக்காயம் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை தனியார் மருத்துவமனை சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



காந்திபுரம் நஞ்சப்பா சாலையில்துவங்கிய பேரணி,கணபதி, சரவணம்பட்டி , காளப்பட்டி , செராயம்பாளையம் வழியாக நீலம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வரை சென்றடைந்தது. 



நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம் என்றும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் போது விபத்து ஏற்பட்டால்,தலைக்கு பலத்த காயம் ஏற்படுவது மட்டுமில்லை, உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம் என்று அறிவுறுத்தினார்.எனவே, ஹெல்மெட் அணிவது குறித்து இருக்கர் சக்கர வாகன ஓட்டிகள் அலட்சியமாக இருக்க கூடாது என்று எடுத்துரைத்தார். 

கோவை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் தொடர்ந்து ஏற்படும் சாலை விபத்துகள் குறித்து பேசிய ஆட்சியர், கோவை மாவட்ட சாலைகளில் 49 பிலைண்டு ஸ்பாட் (Blind Spots) இடங்கள் கண்டறியபட்டு அங்கு அறிவிப்பு மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது எனவும், அதன் மூலம் பெரும்பாலான விபத்துக்கள் குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார். 



மேலும், அந்த இடங்களை எல்லாம் முழுமையாக ஆபத்தில்லா இடங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சாலை விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் முதல்வரின் நம்மை காக்கும் 48 திட்டமும் செயல்பாடு குறித்தும் விளக்கினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...