திருப்பூரில் 80 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல்;  3 பேர் கைது.

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் 4 அடி உயரம் கொண்டவை என்றும் அவற்றின் மதிப்பு ரூபாய். 80 லட்சம் இருக்கும் என்றும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.



 திருப்பூர்: திருப்பூர்வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த அவிநாசியப்பன், சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர்கள் முருகன், வீரப்பன் ஆகியோர் பின்னலடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களிடம் கம்பம் பகுதியில் இருந்த நபர் ஒருவர் அறிமுகமாகி தன்னிடம் யானைத் தந்தங்கள் இருப்பதாகவும், அதை விற்று தருமாறு கூறி நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்து மூலமாக அவிநாசியப்பனுக்கு தந்தங்களை அனுப்பி உள்ளனர். அதைப் பெற்றுக்கொண்ட அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து, தந்தங்களை விற்பதற்கு முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில்குமாருக்கு யானை தந்தங்கள் விற்பனை குறித்து தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தனிப்படை அமைத்து வன அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போது, அவிநாசியப்பனிடம் யானை தந்தங்கள் இருப்பதாக சந்தேகம் அடைந்தனர்.

அதை உறுதிப்படுத்த வனச்சரக அலுவலர் செந்தில்குமார் யானை தந்தங்களை வாங்குவது போல அவிநாசியப்பனிடம் பேசி அதனை காட்ட வரும்படி கூறியுள்ளார். மேலும், ரூபாய்80 லட்சம் வரை விலை நிர்ணயித்த பின்பு செந்தில்குமாருக்கு அவிநாசியப்பன் யானை தந்தங்களை காட்டியுள்ளார். 



அப்போது, அவனிடம் யானைத் தந்தங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் வீரப்பன், முருகன் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 4 அடி உயரமுள்ள 80 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

மேலும், இவர்களுக்கு யானை தந்தம் கொடுத்த நபர் குறித்தும், இறந்த யானையில் இருந்து தந்தங்கள் வெட்டப்பட்டதா? இல்லை தந்தங்களுக்காக யானை கொல்லப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில்வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...