கோவை மதுக்கரை அருகே ஹோலி கொண்டாடி விட்டு குடிபோதையில் வீடு திரும்பிய வடமாநில இளைஞர் லாரி மோதி பலி…!

கோவை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே ஹோலி கொண்டாடி விட்டு வீடு திரும்பிய வட மாநில இளைஞர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் யார்? எங்கு பணியாற்றி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை.


கோவை: கோவை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே ஹோலி கொண்டாடி விட்டு வீடு திரும்பிய வட மாநில இளைஞர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கோவை மதுக்கரை அருகே வடமாநில இளைஞர் ஒருவர் ஹோலி கொண்டாடிவிட்டு, மதுபோதையில் அங்கிருந்த சுங்கச்சாவடி அருகே வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது போதையில் அந்த இளைஞர் மோதி கீழே விழுந்துள்ளார். இதில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்தார். இதனால் சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்கள் அந்த வடமாநில இளைஞரை பிடித்து, மது போதை தெளியும் வரை அங்கிருந்த அலுவலகத்தில் அமர வைத்தனர். 

இதையடுத்து, நள்ளிரவு 1 மணி அளவில் இளைஞரை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, சற்று நேரத்திலேயே சாலையில் நடந்து சென்ற அந்த இளைஞர் மீது பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் வடமாநில இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், உயிரிழந்த வடமாநில இளைஞர் யார்? எங்கு பணியாற்றி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...