கோவை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…!

நாளை நடைபெறவுள்ள திமுக தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர், டாக்டர்.மகேந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, கோவை வந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை: கோவையில் நடைபெறும் திமுக தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் டாக்டர்.மகேந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள கோவை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 



திமுக தகவல் தொழில் நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர்.மகேந்திரன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை ஈச்சரியில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை, மார்ச் 20 ஆமா தேதி நடைபெற உள்ளது. இதில், கலந்துகொள்ள, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

கோவை விமான நிலையம் வந்த அவரை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மருத்துவ அணியை சேர்ந்த டாக்டர். கோகுல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 

இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து ஓய்வெடுக்க அவினாசி சாலையில்உள்ள தனியார் விடுதிக்கு அவர் சென்றார். நாளை, கோவையில் திமுக நிர்வாகிகளை சந்திக்கும் உதயநிதி ஸ்டாலின், மாலை 6 மணிக்கு, கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். 



இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் டிஆர்.பாலு எம்பி, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக அமைச்சர்கள்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...