கோவை வாளையாறு அருகே லாரியில் கடத்திய 170 கிலோ கஞ்சா பறிமுதல், மூவர் கைது - கேரளா கலால் அதிகாரிகள் நடவடிக்கை…!

கோவை - கேரளா எல்லையில், கேரளா கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, வாளையாறு அருகே லாரியின் தார்ப்பாய்க்குள் மறைத்து கடத்தப்பட்ட 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை வாளையாறு அருகே லாரியின் தார்ப்பாய்க்குள் மறைத்து கடத்தப்பட்ட 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு,3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை - கேரளா எல்லையான வாளையார் பகுதியில், கேரளா கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனைச்சாவடியில் ஈடுபட்டனர். அப்போது, கோவையிலிருந்து வாளையார் வழியாக கேரளாவிற்கு வந்த லாரி ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, லாரியின் கேபினில் போடப்பட்டிருந்த தார்ப்பாய்க்கு அடியில் 170 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் லாரியில் பயணித்தவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் கோட்டைக்கல்லை அடுத்த பாரம்மல் பகுதியைச் சேர்ந்த நவுபல் (33), திரூரை சேர்ந்த பாஷில் பிரோஸ் (28), பாலப்புராவைச் சேர்ந்த ஷாகித் (27)என்பதும் விசாரணையில் அவர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வந்து மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் சில்லரை வியாபாரிகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 170 கிலோ கஞ்சா மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து,3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் வாளையார் கலால் துறை ஆய்வாளர், ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...