திருப்பூரில் மனைவியுடன் தொடர்பில் இருந்த கள்ளக்காதலன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன் போலீசில் சரண்..!

இதனையடுத்து, அவரை கைது செய்த 15 வேலம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் மனைவியுடன் தொடர்பில் இருந்த கள்ளக்காதலன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சசிகுமாரும், பிரியாவும் திருப்பூர் 15 வேலம்பாலையம் பகுதியில் தங்கி இருந்து வேறு, வேறு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்கள்.

இந்நிலையில், 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் திருவாரூரை சேர்ந்த தமிழரசன் உடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் சசிகுமார் மனைவி பிரியா சில மாதங்கள் சசிகுமாரை விட்டு சென்று தமிழரசன் அறையில் தங்கி அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். சசிகுமார் பிரியாவிடம் பேசி குழந்தைகளுக்காக தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று கூறி அழைத்து வந்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், பிரியாவுக்கு நேற்று இரவு போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய பிரியா தனக்கு பனியன் கம்பெனியில் வேலை இருப்பதாக உடனே அழைப்பதாக சசிகுமாரிடம் தெரிவித்து விட்டு கிளம்பி சென்று உள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சசிகுமார் தமிழரசன் வசிக்கும் அறைக்குச் சென்று பார்த்து உள்ளார்.



அங்கு தமிழரசனும் பிரியாவும் தனியாக இருப்பதை நேரில் பார்த்த அவர் உள்ளே சென்று தமிழரசன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர், நேரடியாக போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். சசிகுமாரை கைது செய்த 15 வேலம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...