கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீருக்கு ஆதாரமாக உள்ள பில்லூர்‌ அணையினை மேயர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

900 மீட்டர் தொலைவிற்கு சுரங்கம்‌ அமைத்து அதன்‌ வழியாக குடிநீர் குழாய்‌ பொருத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை ஆய்வு செய்தார்‌.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும்‌ ஆதாரமாக உள்ள பில்லூர் அணையினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இன்று (19.03.2022) நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாவட்டம்‌ பில்லூர்‌ அணையின்‌ தலைமை நீரேற்று நிலையம்‌, பில்லூர்‌ வாட்டர்‌ போர்டு பம்பிங்‌ ஹவுஸ்‌, வெள்ளியங்காடு குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌, கட்டன்‌ மலை பகுதிகளில்‌ 900 மீட்டர் தொலைவிற்கு சுரங்கம்‌ அமைத்து அதன்‌ வழியாக குடிநீர் குழாய்‌ பொருத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



தொடர்ந்து, பில்லூர்‌ அணையில்‌ தற்போது தங்கியுள்ள நீரின்‌ அளவு கோவை மாநகராட்சியின்‌ குடிநீருக்காக தினமும்‌ பயன்படுத்தப்படும்‌ குடிநீரின்‌ அளவு உள்ளிட்டவைகளை பொறியாளர்களிடம்‌ கேட்டறிந்த பின்னர்‌, பில்லூர்‌ அணையில்‌ 6 மோட்டார்‌ பம்புகள்‌ மூலமாக குடிநீர் எடுக்கப்பட்டு பின்னர் சுத்தகரிக்கப்பட்டு மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள பொதுமக்களுக்கு விநியோகம்‌ செய்யப்படுகிறது.

அதில்‌ தற்போது ஒரு மோட்டார்‌ பழுதாகி உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்து பயன்படுத்திட வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்‌. வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று குடிநீரின்‌ தரம்‌ குறித்து ஆய்வு செய்த பின்னர், குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தில்‌ குடிநீர்‌ எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோடைக்காலத்தில்‌ மாநகராட்சியில்‌ உள்ள பொதுமக்கள்‌ அனைவருக்கும்‌ சீரான குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க மாநகராட்சி அதிகாரிகள்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ எனவும்‌, குடிநீர் விநியோகம்‌ தடை ஏற்பட்டால்‌ அப்பகுதிகளுக்கு லாரி மூலம்‌ தண்ணீர் வழங்க வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்‌.



பில்லூர்‌ 3வது கூட்டுக்குடிநீர் திட்டம்‌ கட்டன்மலை பகுதியில்‌ தற்போது 900 மீட்டர் தொலைவிற்கு ரூ.62.00 கோடி மதிப்பில்‌ சுரங்கப்பாதை வழியாக குடிநீர் குழாய்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்றுவருவதை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

தற்போது 740 மீட்டர் தொலைவிற்கு பணிகள்‌ நிறைவுபெற்று உள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவாக செய்து முடிக்கவும்‌, பணி நிறைவு பெற்ற பின்னர் குடிநீர் குழாய்‌ அமைத்து குடிநீர் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ கேட்டுக்கொண்டார்‌.



இந்த ஆய்வின்போது துணை மேயர்‌ ரா.வெற்றிச்செல்வன்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளார்கள்‌ எழில்‌, ஜெயன்ராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...