பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு குறித்து தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் - கோவையில் உச்ச நீதிமன்ற நீதிபதி உரை..!

அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில், 33வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.


கோவை: பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு குறித்து தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று அவினாசிலிங்கம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்துள்ளார்.

வடகோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில், 33வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில், சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.



இதில் அனைத்து துறைசார்ந்த 85 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. 72 மாணவியர்களுக்கு, பி ஹெச்டி முனைவர் பட்டங்களும், 22 மாணவிகளுக்கு எம்.பில், ஆய்வியல் நிறைஞர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. 46 மாணவிகளுக்கு முதுநிலை பட்டமும், 2047 மாணவிகளுக்கு இளநிலைப் பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா பேசியதாவது:-

நான் கோவை வந்ததற்கு பெருமைப்படுகிறேன். தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது கோவை மாவட்டம்.

நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு கல்வி மிகவும் அவசியமாக உள்ளது. பெண்களுக்கென இருக்கும் பல்கலைக்கழகங்கள் சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன.

ஒரே இடத்தில் பல பெண்கள் பட்டம் வாங்குவதை பார்ப்பதற்கே பெருமையாக உள்ளது. கல்வியால் மட்டுமே நம் சமூகம் வளர்கிறது. முந்தைய காலகட்டத்தில் தாய், தந்தை தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது கல்வியால் குழந்தைகள் தாய், தந்தையருக்கு சொல்லிக்கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.



பெண்களை மதிக்க வேண்டும் என்று ஆண்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு குறித்து தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் பல்கலையின் வேந்தர் தியாகராஜன், நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் முனைவர் கெளசல்யா மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...