கோவை மாவட்ட ஆட்சியருடன் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் - 50 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு..!

கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, பேருந்து மூலம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ஆட்சியருடன் மாணவ, மாணவிகள் போலாம் ரைட் என்ற தலைப்பில் சுற்றுலா மேற்கொண்டனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியருடன் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டத்தில் 50 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளுக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியருடன் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



தேர்வு செய்யப்பட்ட 50 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள், இதில் கலந்து கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் கேள்விகளை எழுப்பினர்.



அப்போது மாணவி ஒருவர் ஆட்சியரிடம், நீதிபதி ஆகியிருந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு என்ன தண்டனை தருவீர்கள் என கேள்வி எழுப்பினார்.



அதற்கு பதிலளித்த ஆட்சியர், சட்டப்படி என்ன தண்டனை கொடுக்க முடியுமோ அதை நிச்சயம் கொடுப்பேன் என தெரிவித்தார்.



மேலும், போக்சோ குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் பள்ளியிலேயே குறைகள் கேட்க வேண்டும் எனவும் கூறிய அவர், போக்சோ குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து ஒரு வருடம் தடுப்பு காவலில் வைத்துள்ளதாகவும், இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

குழந்தைகள் திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவலின் அடிப்படையில் மாணவியின் பெயரை சொல்லாமல், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும், பெற்றோர்கள் அவர்களை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது அதிக பட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மாநில அரசு எதிர்ப்பதற்கு காரணம் நீட் தேர்வு எழுதித் தேர்வு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு எனவும் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை இருப்பது போன்று போட்டித்தேர்வுகள் அமைய வேண்டும் எனவும், அப்போதுதான் சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சாதாரண மாணவர்கள் நன்றாக படித்து மருத்துவராக வரவேண்டும் எனவும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல விஷயங்களை செய்து கொண்டு வரவேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். மருத்துவரான பின்பு ஐ.ஏ.எஸ் படித்து வென்றுள்ளதாக மாணவர்களிடம் கூறிய அவர், அதற்கு பிறகு தான் அதிகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவதாகவும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, பேருந்து மூலமாக மாணவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு அவர் பயணித்தார். அப்போது மாணவர்கள் போலாம் ரைட் என்ற உற்சாக குரல் எழுப்பினர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,



இனி வாரந்தோறும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும், மாணவர்களிடையே இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், கோவையின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க இருப்பதாகவும் ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...