சர்வதேச வனநாளை முன்னிட்டு கோவை மாவட்ட வனத்துறை சார்பில் கோவை குற்றாலத்தில் புகைப்பட கண்காட்சி..!

இதன் மூலம் சிறுவாணி மலைத் தொடரில் மட்டும் இருக்கும் அரிய வகை பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.



கோவை: சர்வதேச வனநாளை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி சர்வதேச வனநாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச வனநாளை முன்னிட்டு வனம், பறவைகள், விலங்குகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெறும்.

அந்த வகையில், கோவை மாவட்ட வனத்துறை சார்பில் சர்வதேச வனநாளை முன்னிட்டு, கோவை சிறுவாணி மலைத் தொடரில் உள்ள பறவை இனங்கள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் புகைப்படங்களின், புகைப்பட கண்காட்சி நடத்தி உள்ளது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படங்களை பெரும்பாலும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எடுத்துள்ளனர்.



கோவை குற்றாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்பட கண்காட்சியை பார்த்து வருகின்றனர். இதன் மூலம் சிறுவாணி மலைத் தொடரில் மட்டும் இருக்கும் அரிய வகை பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த கண்காட்சியை கோவை வனத்துறை ஏ.சி.எப் செந்தில் துவக்கி வைத்தார்.



இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...