பட்ஜெட்டில் குறுந்தொழில்களின் நலனுக்காக எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றம் - தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம்..!

கோவையின் கட்டமைப்பு வசதிகளுக்காக எந்த ஒதுக்கீடும் இல்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தகவல்.


கோவை: தமிழக அரசின் பட்ஜெட்டில் குறுந்தொழில்களின் நலனுக்காக எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் (TAPMA), தலைவர், R. கல்யாண் சுந்தரம் கூறியதாவது:-

தொழில்துறை வளர்ச்சியில் பிரதான பங்கு வகிக்கும் குறுந்தொழில்களின் நலனுக்காக தமிழக பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லாது ஏமாற்றம் அளிக்கிறது.

அறிவிக்கப்பட்டுள்ள 5 தொழிற்பேட்டைகளில் ஒன்றான கோவை தொழிற்பேட்டை முழுக்க குறுந்தொழில்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு ஒதுக்கப்படும்போது மத்திய அரசின் கிளஸ்டர் திட்டம் மூலம் அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்க முடியும்.

கோவையின் உள்கட்டமைப்புகள் குறிப்பாக பெரும்பாலான சாலைகள் தகர்ந்துள்ள நிலையில் கோவையின் கட்டமைப்பு வசதிகளுக்காக எந்த ஒதுக்கீடும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...