ஆட்சிமொழி பயிலரங்க கருத்தரங்கம் - மாணவர்களுடன் தமிழ் சொல் விளையாட்டு விளையாடிய கோவை மாவட்ட ஆட்சியர்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்க கருத்தரங்கம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்க கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் தமிழ் சொல் விளையாட்டு விளையாடினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆட்சிமொழி குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் எடுத்துக் கூறப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையுரையாற்றினார்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,



அலுவலர்கள் அலுவலகத்தில் ஆட்சிமொழியிலேயே பேசவும், கோப்புகளை பூர்த்தி செய்யவும், கையொப்பமிடவும் வேண்டும் எனவும் இதன் மூலமாகவே ஆட்சி மொழியை வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல இயலும் என தெரிவித்தார்.

அதே போலவே, வீட்டிலும் ஆட்சிமொழியில் பேச முன்வர வேண்டுமெனவும் கூறினார். நமது பெயர் பெயரின் முன் பெயரும் ஆட்சிமொழியை பயன்படுத்தினால் சிறப்பு எனவும் தெரிவித்தார்.





இந்நிகழ்வில், 2018-19ம் ஆண்டில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளிகளில் நடைபெற்ற தமிழ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகளிடம் ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் கண்டறியும் வார்த்தை போட்டியை மாவட்ட ஆட்சியர் விளையாடினார்.

மாவட்ட ஆட்சியர் ஆங்கில சொல் கேட்க மாணவ, மாணவிகள் அதற்கான தமிழ் சொல்லை கூறினர்.



மாவட்ட ஆட்சியர் சகஜமாக மாணவ மாணவியருடன் தமிழ் விளையாட்டு விளையாடியது மாணவர்களிடையேயும் அங்கிருந்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்களிடையேயும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...